ஃபேஷன் மாடலான தாடி பாலாஜியின் மனைவி!

காமெடி நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யாவின் புதிய புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் தாடி பாலாஜி. சினிமா வாய்ப்பு குறைய குறையா தனியார் தொலைக்காட்சி நடத்தி வரும் காமெடி நிகழ்ச்சியில் நடுவராக இருந்தார்

இந்த நிலையில், நித்யா தன்னுடைய கணவர் தன்னையும், குழந்தையையும் அடித்து கொடுமை படுத்துவதாகவும், துன்புறுத்துவதாகவும் போலீசில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து, தற்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், பெண் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஃபேஷன் ஷோ ஒன்று நடந்தது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நித்யாவை கண்ட அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அப்போது பேசிய நித்யா தனக்கு தன்னுடைய அப்பா ஆறுதலாகவும் இருப்பதாகவும், தான் குழந்தைகள் பள்ளி தொடங்கி நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது அவருக்குள்ளும் பல திறமைகள் இருப்பதை வெளிக்கொண்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like More from author