அகில இந்திய வானொலி நிலையத்தில் நிகழ்ச்சி ஒலிப்பதிவு

தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் அகில இந்திய வானொலி நிலையமான  மதுரை வானொலியில் ஒலிபரப்பாகும் சிறுவர் பல்சுவை  நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான    ஒலிபதிவு  செய்யப்பட்டது.                  

மதுரை வானொலி நிலையத்திற்குமாணவ,மாணவியர் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் சென்றனர்.மதுரை வானொலி நிலையத்தினர் மாணவர்களை வரவேற்று ஒலி பதிவு அறைக்கு அழைத்து சென்றனர். மாணவர்கள் பிரஜித்,அஜய்,கனிஷ்கா,முகல்யா ஆகியோர் அபிநய பாடல்களையும் ,கனிஷ்கா வினாடி வினாவையும் ,ஜெயஸ்ரீ ,திவ்யதர்ஷினி  மீனாட்சி அம்மன் கோவில் உருவான வரலாற்றையும் ,முத்தய்யன் ,திவ்யஸ்ரீ ஆகியோர் கண்டுபிடித்தது யார் என்கிற தலைப்பில் அறிவியில் கேள்வி பதில்களையும்,அம்முஸ்ரீ,ராஜேஸ்வரி,தேவதர்ஷினி ஆகியோர் சுழலும் சொற்போர்நிகழ்வையும்,கீர்த்தியா ,ஜனஸ்ரீ ஆகியோர் அறிவியல்பாடல்களையும்,கிஷோர்குமார் 60நொடியில் ஆச்சரியம் மற்றும் கேள்வி கேட்ககற்று கொள்ளுங்கள் தொடர்பாகவும்,ஐயப்பன் தூய்மை பாரதம் என்கிற தலைப்பிலான கவிதையையும்,கிருத்திகா நாடுகளின் தேசிய மலர்கள் என்கிறதலைப்பிலும்,பாக்கியலட்சுமி மற்றும் நித்திய கல்யாணி ஆகியோர் ஆங்கில உரையையும்,ஜெனிபர்,காவியா,சின்னம்மாள் ஆகியோர் மீன்களின் கதையையும் விரிவாக விளக்கியதுடன் சிந்திக்கவும்,சிரிக்கவும் விதமாக நிகழ்ச்சிகளை வழங்கினார்கள். மாணவி தனலெட்சுமி அனைத்து நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார்.ஆசிரியை செல்வமீனாள் மாணவர்களை அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தார்.

பள்ளியில் இருந்து தமிழ்நாடு அரசு தனி பேருந்து மூலம் மாணவர்கள் அனைவரும் பெற்றோர்களுடன் தேவகோட்டை பள்ளியில் இருந்து மதுரை வானொலி நிலையத்திற்கு நேரடியாக அழைத்துசெல்லப்பட்டனர்.பள்ளியின் சார்பாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.மீண்டும் மாணவர்கள் அனைவரும் தமிழ்நாடு அரசின் தனிப்பேருந்து மூலம் மதுரை வானொலி நிலையத்தில் இருந்து தேவகோட்டை பள்ளி வளாகத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் மதுரைக்கு வருவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிகழ்ச்சி மதுரை வானொலியில் வருகிற ஏப்ரல் மாதம் 8 மற்றும் 15ஆம் தேதிகளில் மதியம் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.

பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் அகில இந்திய வானொலியான மதுரை வானொலி நிலையத்தில் சிறுவர் பல்சுவை நிகழ்ச்சிக்கு ஒலி பதிவுக்கு தமிழ்நாடு அரசின் தனி பேருந்து மூலம் சென்ற போது எடுத்த படம்.

You might also like More from author