அடகு கடைபூட்டை உடைத்து நகை மற்றும் பணம் திருட்டு

திருவண்ணாமலை, மார் 2:

திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அருகே அடகு கடை
பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் திருட்டு போனது தொடர்பாக போலீசார்
விசாரித்து வருகின்றனர். சாத்தனூர் அருகே கொழுந்தம்பட்டு கிராமத்தைச்
சேர்ந்தவர் செல்வமணி (29). இவர் அதே பகுதியில் நகை அடகு கடை வைத்து
நடத்தி வருகிறார். இவர் வழக்கம் போல் தனது பணிகளை முடித்துக் கொண்டு
கடந்த 27ந் தேதி  இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார்.
மறுநாள் காலை கடையை திறக்க வந்த போது கடையின் பூட்டு
உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியுற்றார். பின்னர் அவர் சாத்தனூர்
டேம் போலீசில் அளித்த புகாரின் பேரில் எஸ்ஐ வெள்ளைய தேவன் வழக்கு பதிவு
செய்து விசாரித்து வருகிறார். கடையில் சுமார் 15000 ரூ மதிப்பிலான வெள்ளி
பொருட்களும் ரொக்கமாக ரூ 7000மும் திருடு போனதாககூறப்படுகிறது

You might also like More from author