அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குபவர் அனிருத் திருமணம் அது வதந்தி

அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குபவர்கள் பட்டியலில் இசையமைப்பாளர் அனிருத்துக்கு முக்கிய இடம் உண்டு. சமீபத்தில் அவர் திருமணம் பற்றிய செய்தி தீயாக பரவியது.

சென்னையில் உள்ள ஒரு பிரபல நகைக்கடை உரிமையாளரின் மகளை அனிருத் திருமணம் செய்யவுள்ளதாக கூறப்பட்டது. அது வதந்தி என அனிருத் தற்போது விளக்கமளித்துள்ளார்.

“நான் வழக்கமாக இரவு முழுவதும் பணியாற்றிவிட்டு மறுநாள் மதியம் தான் தூங்கி எழுவேன். அப்போது என்னை பற்றி பல காமெடியான செய்திகளை அடிக்கடி பார்க்க நேரும். வாரம் தோறும் தவறாமல் என்னை ஏதாவது பிரச்சனையில் சிக்கவைத்துவிடுகிறார்கள். எதற்காக இப்படி செய்கிறார்கள் என்பது கூட தெரியவில்லை’ என கூறியுள்ளார்.

அனிருத்துடன் பணியாற்றிய ஒருவர் நகைகடை அதிபர் ஒருவரின் ரெகார்டிங் ஸ்டுடியோவில் சேர்ந்துள்ளார், அதை யாரோ தவறாக புரிந்துகொண்ட வதந்தி பரப்பிவிட்டுள்ளார்கள் என மேலும் விளக்கம் தெரிவித்துள்ளனர்.

You might also like More from author