அடையாளம் தெரியாத ஆண் சடலம்

திருவண்ணாமலை, ஏப் 21:

திருவண்ணாமலை அருகே உள்ள கீழ்சிறுப்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் அனபழகன் சம்பவத்தன்று பணியிலிருந்தபோது கிராம மக்கள் கொடுத்த தகவலின் பேரில் கீழ்சிறுப்பாக்கம் பேருந்து நிலையம் அருகே அடையாளம் தெரியாத 70 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் இருந்தது தெரியவந்துள்ளது. காதில் சிறு தோடு அணிந்திருந்த அவர் யார்? எந்த ஊர் ? என தெரியவில்லை. இதுகுறித்து அவர் தண்டராம்பட்டு காவல்நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகினறனர்.

You might also like More from author