அண்ணாதுரை படத்தில் விஜய் ஆண்டனி ரசிகர்களுக்கு இரட்டை விருந்து

இசையமைப்பாளராக ரசிகர்களை கவர்ந்த விஜய் ஆண்டனி, தற்போது நடிகராக கவர்ந்து வருகிறார். இவர் நடித்த படங்களான ‘நான்’, ‘சலீம்’, ‘பிச்சைக்காரன்’ உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் வசூலிலும் சாதனைப் படைத்தது. ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதையையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து ஆச்சிரியப்படுத்தி வரும் விஜய் ஆண்டனி, ‘அண்ணாதுரை” என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை புதுமுக இயக்குனர் ஸ்ரீனிவாசன் இயக்கி வருகிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்துள்ளது. இன்னும் இரண்டு பாடல்களின் படப்பிடிப்பு மட்டுமே மீதமுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் விஜய் ஆண்டனி இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இது ரசிகர்களுக்கு இரட்டை விருந்தாக அமைய இருக்கிறது.

இப்படம் தெலுங்கில் ‘இந்திரசேனா’ என்ற பெயரிலும் வெளியாகவுள்ளது. தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி ‘இந்திரசேனா’வின் முதல் போஸ்டரை வெளியிட்டார். இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

‘அண்ணாதுரை’ படத்தை நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமாருக்கு சொந்தமான தயாரிப்பு நிறுவனமான “ஆர் ஸ்டுடியோஸ்’ நிறுவனத்துடன் இணைந்து பாத்திமா விஜய் ஆண்டனியின் ‘விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன்ஸ்’ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

You might also like More from author

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com