அண்ணாமலையார் கோவிலில் வரும் 24ந் தேதி மகாசிவராத்திரி விழா

திருவண்ணாமலை, ஜன 20:

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வரும் 24ந்
தேதி மகாசிவாராத்திரி விழா நடைபெறவுள்ளது. அதையட்டி லட்சதீப வழிபாடு,
லட்சார்ச்சனை உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும்
பிரசித்தி பெற்ற விழாக்களில் தனிச்சிறப்பு மிக்கது மகாசிவராத்திரி,
பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் இடையே தங்களில் யார் பெரியவர் எனும்
பிரச்னை எழுந்தபோது அடிமுடி காணாத ஜோதிப்பிழம்பாக சிவபெருமான் காட்சி
அளித்த திருநாளை ஆண்டுதோறும் மகாசிவராத்திரியாக இங்கு கொண்டாடப்படுகிறது.
நான் எனும் அகந்தை அடங்கினால் மட்டுமே பரம்பொருளை அடைய முடியும் என்பதை
உணர்த்த லிங்கோத்பவ மூர்த்தியாக அண்ணாமலையார் எழுந்தருளிய திருத்தலம்
என்பதால் திருவண்ணாமலையில் நடைபெறும் மகா சிவராத்திரியை தரிசிக்க ஒவ்வொரு
ஆண்டும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகின்றனர். அதன்படி
மகாசிவராத்திரி விழா வருகிற 24ந் தேதி அண்ணாமலையார் கோவிலில்
வெகுவிமர்சையாக கொண்டாடப்படவுள்ளது. அதையட்டி அன்று அதிகாலை 5 மணிமுதல்
அண்ணாமலையார் சன்னதியில் லட்சார்ச்சனை நடைªபெறும். மாலை 6 மணிக்கு
கோவிலின் அனைத்து பிரகாரங்களிலும் லட்ச தீபங்கள் ஏற்றி பக்தர்கள்
வழிபடுவார்கள். அதைத் தொடர்ந்து அண்ணாமலையார் கோவில் வழக்கப்படி மகா
சிவராத்திரி இரவில் 4 கால பூஜை நடைªபெறும். இரவு 8.30 மணிமுதல்
காலபூஜையும் இரவு 11 மணிக்கு இரண்டாம் கால பூஜையும் நள்ளிரவு 12 மணிக்கு
3ம் கால பூஜையும் அதிகாலை 4 மணிக்கு 4ம் கால பூஜையும் நடைபெறும். மேலும்
நள்ளிரவு 12 மணிக்கு சுவாமி கருவறைக்கு மேற்கு திசையில் அமைந்துள்ள
லிங்கோத்பவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்
மகாசிவராத்திரி உருவான கோவில் என்பதால் அண்ணாமலையார் கோவிலில் பல்வேறு
சிறப்பு ஏற்பாடுகள் கோவில் இணை ஆணையர் சி.ஹரிபிரியா மேற்பார்வையில்
செய்யப்பட்டுள்ளன. அதன்படி கோவில் கலையரங்கில் மாலை 6 மணி முதல் விடிய
விடிய தேவாரப்பாடல்கள், இன்னிசை, பரதநாட்டியம், மற்றும் கோவில்
ராஜகோபுரம் எதிரில் 108 தவில் நாதஸ்வர கலைஞர்களின் தொடர் இசை நிகழ்ச்சி
ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

You might also like More from author

Facebook Auto Publish Powered By : XYZScripts.com