அனாதையாக கிடந்த பச்சிளங் குழந்தை

திருவண்ணாமலை, ஏப் 21:

திருவண்ணாமலை மாவட்டம் வெறையூர் அருகே அனாதையாக கிடந்த பச்சிளங்குழந்தையை சைல்டு கேர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது. தண்டரை பகுதியைச் சேர்ந்தவர் சுமதி. இவர் தண்டரை ரயில்வே ஸ்டேஷன் அருகே சென்று கொண்டிருந்தபோது குழந்தை அழும் சப்தம் கேட்டு அருகே சென்று பார்த்துள்ளார். அங்கே பிறந்து 4 அல்லது 5 நாட்களே ஆன ஆண் குழந்தை அழுத நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அந்த குழந்தையை எடுத்து வந்து தன் வீட்டில் வைத்துக்கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்துறையினர் உடனே அந்த குழந்தையை மீட்டு சமூகநலத் துறை மூலம் திருவணணாமலை சைல்டுகேர் நிறுவனத்தில் ஒப்படைத்தனர். இதற்கிடையில் சுமதி அந்த குழந்தையை தானே வளர்கிறேன் என கேட்டுள்ளார். அதற்கு சைல்டு கேர் நிறுவனம் சட்டப்படி தத்து எடுத்துக் கொள்ளுங்கள் என கூறியுள்ளனர்.
பிறந்து ஆறே நாளான இந்த குழந்தை வறுமையின் காரணமாக பெற்றவர் விட்டுவிட்டு சென்றரா? தவறான வழியில் பிறந்ததால் வீசிவிட்டனரா? எது எப்படி இருந்தாலும் பெற்ற குழந்தையை வீசும் அளவிற்கு கல்நெஞ்சம் படைத்தவரா அந்த குழந்தையின்
தாய்? யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like More from author

Facebook Auto Publish Powered By : XYZScripts.com