May 2, 2017
31 Views
0 0

கோஹ்லியின் காதலிக்கு காலையிலேயே போன் செய்த ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான்

Written by
banner

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் வீராட் கோஹ்லியின் காதலியான பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவிற்கு ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் ஆப்கான் வீரர் போன் பண்ணி வாழ்த்து கூறியுள்ளார்.

பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மா தனது 29வது பிறந்த மே 1ம் திகதி கொண்டாடினார்.

இந்நிலையில், அனுஷ்கா பிறந்தநாளில் காலையிலேயே போன்செய்த ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித் கான் வாழ்த்துச்சொல்லியுள்ளார்.

எனக்கு எப்போதும் பிடித்த ஒரே நடிகை நீங்கள் தான், உங்களை நேரில் பார்க்கணும் என்று கோரி அசத்தியுள்ளார்.

19 வயதான ரஷித் கான் தற்போது ஐதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Article Categories:
விளையாட்டு

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *