அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி: சானியா மிர்சா, ரோஹன் போபண்ணா 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

வாஷிங்டன்:

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் இந்தியாவின் ஆண்கள் இரட்டையர் பிரிவில் முன்னனி வீரரான ரோகன் போபண்ணா, பெண்கள் இரட்டையர் பிரிவில் வீராங்கனை சானியா மிர்சா இரண்டாம் சுற்றிற்கு முன்னேறியுள்ளனர்.

ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் போபண்ணா மற்றும் பாப்லோ ஜோடி அமெரிக்க ஜோடியான பெரேட்லி க்ளான், ஸ்காட் லிப்ஸ்கி ஜோடியை எதிர்கொண்டது. இதில் போபண்ணா ஜோடி 1-6 6-3 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியது. அடுத்த சுற்றில் இந்த ஜோடி இத்தாலியின் சிமோன் போல்லி மற்றும் பபியோ ஃபோக்னி ஜோடியை எதிர்கொள்கிறது.

அதே போல், பெண்கள் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா மற்றும் சீனாவின் சுயாய் பெங் ஜோடி முதல் சுற்றில் குரோஷிய ஜோடியான பெட்ரா மாட்ரிக் மற்றும் டோனா வேகிக்கை எதிர்கொண்டது. இதில் சானியா மிர்சா ஜோடி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அடுத்த சுற்றில் மிர்சா ஜோடி ஸ்லோவாக்கியா ஜோடியை எதிர்கொள்கிறது.

You might also like More from author