அம்மா திட்ட முகாமில் 24 பேருக்கு நலத்திட்ட உதவி

திருவண்ணாமலை, ஏப் 22:

திருவண்ணாமலை வட்டம் தச்சம்பட்டில் நடைபெற்ற அம்மா திட்ட முகாமில் 24 பேருக்கு நலத்திட்ட உதவிகளை தாசில்தார் ஆர்.இரவி வழங்கினார். திருவண்ணாமலை வட்டம் தச்சம்பட்டு வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் அம்மா திட்ட முகாம் நேற்று நடைபெற்றது. இம்முகாமிற்கு தாசில்தார் ஆர்.இரவி தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார்
டி.ரமேஷ்குமார் முன்னிலை வகித்தார். வருவாய் ஆய்வாளர் ஏ.முனிசாமி அனைவரையும் வரவேற்றார். இந்த முகாமில் பொதுமக்களிடமிருந்து 132 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 42 மனுக்கள் ஏற்கப்பட்டது. 47 மனுக்கள் பரிசீலனையில்
உள்ளது. 43 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த முகாமில் சிறுவிவசாயி சான்று 18 பேருக்கும், பட்டா மாறுதல் 6 பேருக்கும் மொத்தம் 24 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை தாசில்தார் ஆர்.இரவி வழங்கினார். முகாமில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் ஏ.ரமேஷ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எம்.குப்புசாமி, மற்றும் அரசு அலுவலர்கள், வருவாய்த்துறை பணியாளர்கள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் கிராம நிர்வாக அலுவலர் எம்.மாதவன் நன்றி கூறினார்.

You might also like More from author

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com