அரசு கலைக்கல்லூரியில் 1223 மாணவ மாணவிகளுக்கு பட்டயங்கள் ஆட்சியர் பிரசாந் வடநேரே வழங்கினார்

திருவண்ணாமலை, ஏப். 1:

திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற
விழாவில் 1223 மாணவ மாணவிகளுக்கு பட்டயங்களை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த்
மு.வடநேரே வழங்கினார்.
திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் உள்ள தந்தை பெரியார் அரங்கில்
2013-14ஆம் கல்வியாண்டுக்குரிய பட்டமளிப்பு விழா நேற்று (வியாழக்கிழமை)
நடைபெறவுள்ளது. இவ்விழாவுக்கு கல்லூரி முதல்வர் மு.சின்னையா வரவேற்று
பேசினார்.  சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நிகழ்ச்சிக்கு தலைமையேற்று
மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே 1223 மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள்
வழங்கி விழா பேருரையாற்றுகையில் கல்லூரியில் படிக்கும்போது மாணவர்கள்
கனவு காண வேண்டும் நான் படிக்கும்போது ஐஏஎஸ் ஆக கனவு கண்டேன் அதற்கான
முயற்சியை மேற்கொண்டு தற்போது ஆட்சியர் பணியில் உள்ளேன் வேலை, காசு,
பதவிக்கு முக்கியத்துவம் தருகிறோம். கனவுகாண முக்கியத்துவம் தருவதில்லை
இப்போது கனவு காணவில்லையென்றால் எதிர்காலத்தில் வருத்தப்பட வேண்டும் கனவு
காண்பது எளிதாக அடைய முடியாது அதற்காக கஷ்டப்படவேண்டும் கனவுக்கு
இலக்குகிடையாது பரந்து விரிந்து இருக்கிறது எவ்வளவு வேண்டுமானாலும் கனவு
காணலாம் இவ்வாறு அவர் பேசினார்
விழாவில் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள்,
கல்வியாளர்கள், மற்றும் மாணவ மாணவியர், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி முதல்வர்
மு.சின்னையா மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

You might also like More from author