Apr 21, 2017
2 Views
0 0

அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் டாக்டர்கள் பணிபுறக்கணிப்பு – நோயாளிகள் கடும் பாதிப்பு

Written by
banner

திருவண்ணாமலை, ஏப் 22:

திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பட்ட மேற்படிப்பு படிப்பிற்கான 50 சதவீத இடஒதுக்கீடு
வழங்கக்கோரி அரசு டாக்டர்கள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பட்டமேற்படிப்பு படிப்பிற்கான 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுவந்தது. தற்போது இந்த இடஒதுக்கீட்டை அரசு ரத்து செய்துள்ளது. இதைக்கண்டித்து திருவண்ணாமலையில் மருத்துவர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது 50 சதவீத இடஒதுக்கீட்டை அமுல்படுத்தாவிட்டால் தமிழ்நாடு முழுவதிலுமுள்ள அனைத்து அரசு மருத்துவமனையில் படிப்படியாக புறநோயாளி பிரிவை புறக்கணிக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என அறிவித்திருந்தனர். ஆனால் அரசு 50 சதவீத இடஒதுக்கீட்டை அமுல்படுத்த முன்வராததை கண்டித்து மருத்துவர்கள்
திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவை நேற்று (வியாழக்கிழமை) புறக்கணித்து வெளியேறினர். பின்னர் அவர்கள் காலை 7.30 மணிமுதல் 9.30 மணிவரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பட்ட மேற்படிப்பு படிப்பிற்கான 50 சதவீத இடஒதுக்கீடு விரைவில் அமுல்படுத்த வேண்டும். அதேபோல் கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் டாக்டர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு மதிப்பெண்ணை தொடர்ந்து வழங்க
வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். சுமார் 2 மணிநேரம் புறநோயாளிகள் பிரிவை புறக்கணித்து 150க்கும் மேற்பட்ட அரசு டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் நோயாளிகள் கடும்
அவதிக்குள்ளாயினர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Facebook Auto Publish Powered By : XYZScripts.com