அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக தண்ணீர் தின விழிப்புணர்வு போட்டிகள்

திருவண்ணாமலை, மார். 17:

திருவண்ணாமலை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில்
அமைந்துள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக கூட்டரங்கில்
பள்ளிக்கல்வித்துறை ,சுற்றுச்சூழல் துறை , மாவட்ட தேசிய பசுமை படை ஆகியவை
இணைந்து உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவியர்களுக்கு ஓவியம்,
கட்டுரை, பேச்சுபோட்டிகளை நடத்தினர். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட
முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். தேசிய பசுமை படை
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டி.கார்த்திகேயன் அனைவரையும் வரவேற்று பேசினார்
சுற்றுச்சூழல் மன்ற மாவடட ஒருங்கிணைப்பாளர் ஜி.மூர்த்தி சுற்றுச்சூழல்
குறித்து விளக்கிபேசினார் இதில் மாவட்டம் முழுவதிலுமிருந்து 129 பள்ளிகளை
சேர்ந்த மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில்
சுற்றச்சூ£ல் பாதுகாப்பு, தண்ணீர் சேமிப்பு, தண்ணீரை சிக்கனமாக
பயன்படுத்துதல் குறித்து விளக்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு
நிகழ்ச்சியில் வேட்டவலம் , தண்டராம்பட்டு, பனைஓலைப்பாடி , பரமனந்தல்,
பழையனூர் ஆகிய பள்ளி தலைமைஆசிரியர்கள் நடுவர்களாக இருந்து மாணவர்களின்
சிறந்த 3 படைப்புகளை தேர்ந்தெடுத்தனர். தேர்ந்தெடுக்கப்பட்ட
மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில்
சிறப்பு அழைப்பாளராக திரைப்பட நடிகர் பாண்டு கலந்து கொண்டு
சுற்றுச்சூழலுக்கு உகந்த துணிப்பையை அறிமுகப்படுத்தி நிறைவுரையாற்றினார்.
அதனை சண்முகா அரசு மேல்நிலைப்பள்ளி பசுமைப்படை ஆசிரியர் டி.எஸ்.பாலாஜி
பெற்றுக் கொண்டார்.

You might also like More from author