அழகு மங்கையர்களுக்கான ஆரோக்கியமான டிப்ஸ்..!

காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்னும் பழமொழி இன்று பயனில்லாத மொழியாகி விட்டது. காரணம், கரண்ட் வழியாக மின்விசிறியை சுழலவிட்டு தேவைப்படும் போது தூற்றிக் கொள்ளலாம் என்கின்ற துணிவை நமக்கு  நாகரீகம் கற்று கொடுத்துவிட்டது. அதுபோல் தான் எத்தனையோ அர்த்தம் உள்ள அறிவுறைகளை எல்லாம் அலட்சியப்படுத்திவிட்ட காரணத்தால் இன்று அவதிப்படும் அழகு மங்கையர்களுக்காகவே அற்புதமான பயன் உள்ள ஆரோக்கியத்திற்கான டிப்ஸ்களை அள்ளித் தருகிறார் அழகு, ஆரோக்கிய கலை சிற்பி டாக்டர் சாருமதி.

யாருக்கும் அழகுடன் இளமை திரும்பி விரும்ப வராது. ஆனால் அந்த அழகுடன் இளமையில் ஆரோக்கியத்தை பேணிக்காத்து விட்டால் முதுமையில் மூட்டுவலி..! முதுகு வலி , அந்த வலி, இந்த வலி என்று மாத்திரைகளில் வாழ்க்கையை கடக்கும் மாந்தர் தம் மடமையை உடைக்க வேண்டும். முதலில் பெண்ணாக பிறந்த பெருமையை உணர வேண்டும். பெண்கள் வீட்டின் கண்கள் மட்டுமல்ல இந்த நாட்டின் தூண்களும் கூட. அந்த தூண்களின் உறுதித் தன்மையை இழந்துவிடக்கூடாது என்று கூறும் டாக்டர் சாருமதி நமது விவேகம் வாசகர்களுக்காக நமக்கு அளித்த சிறப்பு பேட்டியில்…

தினமும் அதே அலுவலகம், அதே குடும்பம், அதே மனிதர்கள் இப்படி யோசித்தால்  வாழ்க்கை சலித்துவிட்டதாக நாம் உணர்வோம்.
எதுவும் மாற்றமின்றி இருப்பதாக உணர்வோம். அலுவலகத்தை மாற்ற நினைப்போம், குடியிருப்பை மாற்றத் தோன்றும், புதிது புதிதாக வாங்கத் தோன்றும், ஆனால் எதை மாற்றினாலும் எதை வாங்கினாலும் என்றுமே  நம்முடன் கலந்து நம்மை காப்பாற்றுவது நமது ஆரோக்கியம் மட்டுமே..!

இந்த ஆரோக்கியம் குறைந்தால் எதை மாற்றியும், எதை வாங்கியும் பலன் இல்லாமல் போய்விடும். சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதுதானே அனைவரின் விருப்பம் ? இந்த சந்தோஷத்தை அனுபவிக்க நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் அல்லவா…

நாம் இழக்க கூடாத மாபெரும் சொத்து ஆரோக்கியம்

குறிப்பாக பெண்கள், பெண்கள் வீட்டின் கண்கள் இந்த கண்கள் (பெண்கள்) ஆரோக்கியமாக இருக்க அழகாக இருக்க புத்துணர்ச்சியாக இருக்க இதோ சில ஆரோக்கிய குறிப்புகள். இன்று பெரும்பாலான பெண்கள் ஆரோக்கிய குறைப்பாடுடன் தான் இருக்கிறார்கள் ஏனென்றால் கணவரையும், குழந்தைகளையும் கண்ணும் கருத்துமாக பார்க்க தெரிந்த பெண்களுக்கு ஏனோ தன்னுடைய உடல் நலனில் அக்கறை செலுத்த முடியாமல் போகிறது. இதனால் நாளடைவில் மிகுந்த சோர்வுக்கு ஆளாகிறார்கள். குறிப்பாக மாதவிடாய் சுழற்ச்சி பிரச்சனை முதன்மையானது.

இதிலிருந்து தப்பிக்க இதோ சில ஆரோக்கியமான டிப்ஸ்….

நீங்கள் சாப்பிடுவதை பொறுத்து அமைவதுதான் உங்கள் உடலும், உங்கள் அழகும், என்பதை மறந்துவிடாதீர்கள்.

1. இரும்பு சத்து நிறைந்த கீரை வகைகள், பேரிச்சம் பழம், போன்றவற்றை தினமும் உணவில் சேர்க்க வேண்டும்.

2. தினமும் எளிமையான உடற்பயிற்சி செய்வது மிகவும் நல்லது.

3. நிறைய காய்கறிகள், பழங்கள், மற்றும் முளைக்கட்டிய தானியங்களை தினமும் உடலில் சேர்த்து கொண்டால் இன்னும் அதிக துடிப்பானவர்களாக ஆக்கும்.

4. இரசாயனங்கள் சேர்த்துள்ள வெள்ளாய் சர்க்கரையை உபயோகிப்பதை விட கருப்பட்டி அல்லது தேனை சேர்த்து கொள்ளலாம்.

5. தலைவலி, உடல் வலி என்று எதற்கெடுத்தாலும் ஒரு மாத்திரையை போட்டுக் கொள்வது நல்லதல்ல அதற்கு பதிலாக எண்ணெய் குளியல், கசாயம், எளிய உடற்பயிற்சி போன்ற இயற்கை மருத்துவ முறையை பின்பற்றுவது நல்லது.

6. சோற்றுக்கற்றாழையை மோரில் கலந்து தினமும் உண்டு வந்தா அல்சர் போன்ற  நோய்கள் குணமாகும். மேலும் உடல் என்றும் இளமையாக இருக்கும்.

7. பாலில் உள்ள கால்சியத்தை விட கேழ்வரகில் அதிகம் கால்சியம் உள்ளது. கேழ்வரகு நோய எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதில் அதிகளவு கால்சியமும், இரும்புச்சத்தும் உள்ளது. இது பெண்களுக்கு மிகவும் நல்லது.

8. நல்ல உறக்கம் இல்லாவிட்டால் தலைபாரம், வலி உடல்சோர்வு, உடல் வலி, கண்வலி போன்றவை ஏற்படும்.

9. நல்ல மூச்சு பயிற்சியும், நல்ல மன பயிற்சியும் ஆழ்ந்த உறக்கத்திற்கு வழிவகுக்கும்.

மேலும் இதுபோன்ற எளிய டிப்ஸ்களுக்கு ஜி.சி.டி நேட்சர்ஸ் கிஃப்ட், ஹெர்பல் & ஆயுர்வேதிக் நிலையம், 7402081981 என்ற எண்ணில் டாக்டர் சாருமதியை தொடர்பு கொள்ளலாம்.

You might also like More from author