அவுஸ்திரேலிய வீரர் ஆடம் வோஜஸ் ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார்

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து அவுஸ்திரேலிய வீரர் ஆடம் வோஜஸ் ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார்.

கான்பராவில் இலங்கையுடன், அவுஸ்திரேலியாவின் Prime Minister’s XI அணி மோதவுள்ளது. இந்த போட்டிக்கு முன் பேட்டியளித்த 37 வயதான ஆடம் வோஜஸ் கூறியதாவது,

சர்வதேச அணிக்கு எதிராக தான் களமிறங்கும் கடைசி போட்டி இது என குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறியதாவது, கடந்த இரண்டு ஆண்டுகளாக அவுஸ்திரேலிய டெஸ்ட் அணியில் விளையாடிய நாட்கள் மிக அருமையாக இருந்தது. ஒவ்வொரு நிமிடத்தையும் நான் ரசித்தேன் என தெரிவித்துள்ளார்.

வோஜஸ் 20 போட்டிகளில் 1485 ஓட்டங்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சொந்த மண்ணில் தென் ஆப்ரிக்காவிடம் டெஸ்ட் தொடரை அவுஸ்திரேலிய இழந்ததையடுத்து வோஜஸ் டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது நினைவுக்கூரத்தக்கது.

You might also like More from author

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com