அ.தி.மு.க. அணிகள் ஓரிரு நாட்களில் இணையும்: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

சென்னை:

அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைந்து விடும் என்ற எதிர்பார்ப்பு நேற்று காலை தொடங்கி இரவு 9 மணி வரை பரபரப்பாக நீடித்தது.

இரு அணி தொண்டர்களும் அ.தி.மு.க. தலைமை அலுவலகம் மற்றும் ஜெயலலிதா நினைவிடத்தில் திரண்டிருந்த நிலையில் திடீரென இரு அணி இணைப்பு முயற்சியில் சமரசம் ஏற்படவில்லை என்ற தகவல் வெளியானது. இதனால் அ.தி.மு.க. தொண்டர்கள் அளவுகடந்த ஏமாற்றத்துக்கும், விரக்திக்கும் உள்ளானார்கள்.

இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் இன்று தனது ஆதரவாளர்களுடன் 2-வது நாளாக ஆலோசனையில் ஈடுபட்டார். மதியம் 1 மணிக்கு இந்த ஆலோசனை முடிந்தது. அதன் பிறகு 1.15 மணிக்கு அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. அணிகள் இணைப்பதை பற்றிய பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் நல்ல முடிவு எட்டப்படும்.

அ.தி.மு.க. அணிகளுக்கு இடையே எந்த கருத்து வேறுபாடுகளும் இல்லை. அ.தி.மு.க.வை காப்பற்றவும் எம்.ஜி.ஆர். – ஜெயலலிதா ஆகியோர் காட்டிய அரசியல் பாதையில் தொடரவும் இணைப்பு திட்டமிட்டப்படி நடைபெறும்.

தமிழக மக்களும், அ.தி.மு.க. தொண்டர்களும் அ.தி.மு.க. அணிகள் இணைவதை எதிர்பார்க்கிறார்கள். அந்த விருப்பம் நிறைவேறும். விரைவில் நல்ல முடிவை நீங்கள் எதிர்பார்க்கலாம்.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

You might also like More from author

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com