Home தமிழகம் அ.தி.மு.க.வை கட்டிக்காக்க எந்த ஒரு முடிவும் எடுக்க தயங்க மாட்டேன்: டி.டி.வி. தினகரன்

அ.தி.மு.க.வை கட்டிக்காக்க எந்த ஒரு முடிவும் எடுக்க தயங்க மாட்டேன்: டி.டி.வி. தினகரன்

20

தஞ்சாவூர்:

அ.தி.மு.க. அம்மா அணி துணை பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று தஞ்சையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. பரபரப்பிற்காக என்னால் எதுவும் கூற முடியாது. வருங்கால இயக்க வளர்ச்சிக்காக எந்த ஒரு நடவடிக்கையையும் நான் துணிச்சலுடன் மேற் கொள்வேன். அ.தி.மு.க. வளர்ச்சிக்கு எந்த ஒரு அறுவை சிகிச்சையையும் தேவையான நேரத்தில மேற்கொள்வேன்.

அறுவை சிகிச்சை எப்போது தேவைப்படும் என்பதை நான் முடிவு செய்வேன். நான் 23 வயதில் இருந்தே அ.தி.மு.க. நடவடிக்கையை கவனித்து வருகிறேன். யாரையும் வசைபட விரும்பவில்லை.

திவாகரனுக்கு பதவி குறித்து பொது செயலாளர் சசிகலாதான் முடிவு செய்வார். முதல் -அமைச்சர் கொண்டு வந்த தீர்மானம் செல்லாது. கட்சியின் வளர்ச்சிக்காக எந்த ஒரு நடவடிக்கையும் நான் எடுக்க தயங்க மாட்டேன்.

சில நண்பர்கள் சுய நலம், பயம் காரணமாக சசிகலா குடும்பத்தை கட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று நினைக்கிறார்கள். போலீசார் அனுமதி மறுத்தாலும் மேலூரில் பொதுக்கூட்டம் நடத்தப்படும்.

அது போல் மன்னார்குடியிலும் பொதுக்கூட்டம் நடத்தப்படும்.

தி.மு.க. நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால்அது குறித்து அப்போது முடிவு செய்யப்படும். தேர்தலின் போது கூட்டணி குறித்து முடிவு எடுப்போம். ஆட்சி நீடிக்குமா? என்று முதல் -அமைச்சர் எடப்பாடியிடம் தான் கேட்க வேண்டும்.

அ.தி.மு.க.வின் முழு அதிகாரம் பொது செயலாளர் வசமே உள்ளது. அ.தி.மு.க. வை கட்டிக்காக்க எந்த ஒரு முடிவும் எடுக்க தயங்க மாட்டேன். கட்சியை கட்டிக் காக்கும் முழு பொறுப்பு எனக்கு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.