ஆப்கானிஸ்தான் ராணுவ முகாம்கள் மீது தலிபான்கள் நடத்திய தற்கொலை படை தாக்குதல்

ஆப்கானிஸ்தான் ராணுவ முகாம்கள் மீது தலிபான்கள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 130 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆப்கானிஸ்தான் நாட்டில் அரசாங்கத்திற்கும் தலிபான் தீவிரவாதிகளுக்கும் பல ஆண்டுகளாக யுத்தம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஆப்கானில் உள்ள Mazar-e-Sharif என்ற நகரில் ஆப்கான் வீரர்கள் முகாமிட்டுள்ளனர்.

இதனை ரகசியமாக அறிந்த தலிபான் தீவிரவாதிகள் நேற்று ஆப்கான் ராணுவ வீரர்கள் போல் உடை அணிந்துக்கொண்டு முகாம்களுக்குள் அதிரடியாக நுழைந்துள்ளனர்.

உள்ளே நுழைந்ததும் கண்ணில் பட்டவர்கள் அனைவர் மீதும் கொலை வெறி தாக்குதலை நிகழ்த்தியுள்ளனர்.

சில தீவிரவாதிகள் தற்கொலை படைகளாக மாறி ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

சுமார் 7 மணி நேரம் நிகழ்ந்த இந்த தாக்குதலை தொடர்ந்து ராணுவ வீரர்களும் எதிர்த்தாக்குதலை நடத்தியுள்ளனர்.

எனினும், இத்தாக்குதலில் ஆப்கான் ராணுவத்தை சேர்ந்த 130 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தலிபான் தீவிரவாதிகள் 10 பேர் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானை உலுக்கியுள்ள இத்தாக்குதலில் ராணுவ வீரர்களின் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

You might also like More from author