ஆரணி ஒழுங்குமுறை விற்பனை கூடம் ஆட்சியரிடம் விவசாயிகள் புகார்

திருவண்ணாமலை, ஏப் 26:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஓழங்குமுறை விற்பனை
கூடத்தை அரசு அதிகாரிகளின் ஓத்துழைப்போடு தனியார் வியாபாரிகள்
தன்வசப்படுத்தி கொண்டு தினமும் பலாயிரம் ருபாய் முறைகேடு நடந்து வருவதாக
விவசாயிகள் ஆட்சியரிடம் புகார் தெரிவித்ததை அடுத்து மாவட்ட ஓழுங்குமுறை
செயலாளர் அதிரடி ஆய்வு நடத்தினார்.

நாட்டின் முதுகெலும்பாக உள்ள விவசாயித்தையும், அவற்றை விதைக்கும்
விவசாயிகளை இடைத்தராகளிடம் இருந்து காப்பாற்ற நாடு முழுவதும் பல்வேறு
நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.அதிலும் குறிப்பாக தமிழக அரசு
விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நியமான விளைகிடைக்க ஓவ்வொரு பகுதியிலும்
ஓழுங்குமுறை விற்பளை கூடங்களை அமைத்து விவசாயிகளின் உற்பத்திகளுக்கு
நியமான விளைகளை வழங்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்திலேயே பின்தங்கிய மாவட்டமான திருவண்ணாமலை மாவட்டம்
ஆரணி ஓழுங்குமுறை விற்பனை கூடத்தில்தான் நாள்தோறும் தனியார்
வியபாரிகளுடன் கைகோர்த்து கொண்ட ஓழுங்குமுறை கண்காணிப்பாளர்
உள்ளிட்டவர்கள் அடிக்கும் பகல் கொள்ளைபற்றி விவசாயிகளின் புகரால்
வெளிச்சத்திற்கு வந்துள்ளது.இதுபற்றி செய்யார் ஏழமலை என்பவர் தி.மலை
மாவட்ட ஆட்சியர் பிராசாந்த் மு.வடநேரேவுக்கு தெரிவித்துள்ள புகாரில்,
தி.மலை மாவட்டத்தில் உள்ள அரசு ஓழுங்குமுறை விற்பனை கூடத்தில் சேத்பட்
அடுத்ததாக அதிக வரத்து கொண்டது ஆரணி ஓழுங்குமுறை கூடமாகும். இங்கு
தினமும் விவசாயிகளின் முக்கிய உற்பத்தியான நெல் அதிகளவில் கொண்டு
செல்கிறோம்.அப்படி கொண்டு செல்கின்ற நெல்லை ஆரணி ஓழுங்குமுறை விற்பனைகூட
கண்காணிப்பாளர் ஜமுனா என்பவர் விழப்புரத்தை சேர்ந்த கமர் டிரெடர்ஸ் என்ற
தனியார் வியாபாரிடம் கமிஷன் வாங்கிக்கொண்டு பல்வேறு முறைகேடுகளை செய்து
வருகிறார் எனவும், மேலும் விவசாயிகளின் பரிவர்த்தனை கூடத்தை தனியார்
வியாபாரியான விழப்புரம் கமர் டிரெடர்ஸ் வசமிடம் தாரைவார்த்து
விட்டார்.அவர்கள் விவசாயிகளான் நாங்கள் கொண்டு வரும் நெல்லையும், அவர்கள்
வெளி மார்க்கெட்டில் கொள்முதல் செய்யும் இரண்டாம் ரக நெல்லையும் ஓன்றாக
கொட்டி கலந்து அங்கேயே மூட்டை போட்டு லாரிகளில் ஏற்றி கொண்டு
செல்கின்றனர்.இந்த கலப்பின மோசடிக்கு ஆரணி ஓழுங்குமுறை விற்பனைகூட
கண்காணிப்பாளர் ஜமுனா உடந்தையாக செயல்படுகிறார்.

மேலும் தனியார் வியாபாரியான விழப்புரம் கமர் கம்பெனி விவசாயிகளின்
பரிவர்த்தனை கூடத்தில் நாள் தோறும் குறைந்தது 4ஆயிரம் முட்டைகள் வரை
தயார் செய்கிறார்களாம்.அப்படி தயார் செய்யும் ஓவ்வொரு மூட்டைக்கும்
15ருபாய் விதம் நாள் ஓன்றுக்கு சுமார் 30ஆயிரம் வரை கண்காணிப்பாளர்
கமிஷன் பெற்றுக்கொள்கிறார் என மாவட்ட ஆட்சியரிடம் விவசாயி ஏழமலை புகார்
தெரிவித்து பரிவர்த்தனை நேரத்தில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு
புகார் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து மாவட்ட ஓழுங்குமுறை விற்பனை மையத்தின் செயலாளரை ஆய்வு செய்து
நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே
உத்தரவிட்டார்.அவரின் உத்தரவையடுத்து ஆரணி ஓழுங்குறை விற்பனை கூடத்துக்கு
செயலாளர் உள்ளிட்ட அலுவலர்கள் பரிவார்த்தனை நடக்கும் நேரத்தில் ஆய்வுக்கு
சென்றனர்.அப்போது தனியார் வியாபாரியான விழப்புரம் கமர் டிரெடர்ஸ்;
சேர்ந்தவர்கள் விவசாயிகளின் பரிவர்த்தனை கூடத்தில் நெல்லை கலப்பு செய்து
மூட்டை போடுவதை கையும் களவுமாக பிடித்தனர்.

விவசாயத்தை தவிர வேறு எந்தவித தொழில் வளர்ச்சியும் இல்லாத திருவண்ணாமலை
மாவட்டத்தில் விவாயிகளின் வாழ்க்கைக்கு நாள்தோறும் வேட்டு வைக்கும் ஆரணி
ஓழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்க
வேண்டுமென மாவட்டத்தில் அனைத்து தரப்பு விவசாயிகள் மாவட்ட
நிர்வாகத்துக்கும் தமிழக அரசுக்கும் கோரிக்கை  விடுத்துள்ளனர்.

You might also like More from author

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com