அவர் பேசியது இருக்கட்டும் முதலில் நீ வா அசிங்கப் பட்ட ஆர்யா

முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று மாலை சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதியில் அரைமணி நேரத்திற்கு மேல் அமைதியாக அமர்ந்து தியானம் செய்துவிட்டு, பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பல திடுக்கிடும் உண்மைகளை தெரிவித்தார்.

தான் சசிகலாவால் மிரட்டப்பட்டதாகவும், கட்சியினர் பலர் தன்னை அவமானப்படுத்தியதாகவும் அதனால் தான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததாகவும் கூறினார்.

இப்படி தைரியமாக பேசிய ஓபிஎஸ்சை பாராட்டி நடிகர் ஆர்யா ஒரு ட்வீட் போட்டார். அதில் ‘சரியான நேரத்தில் அவர் உண்மையை பேசியிருப்பதாக’ குறிப்பிட்டிருந்தார். இந்த ட்வீட் ஆர்யாவிற்கு பெரிய பல்ப்பை தான் வாங்கி கொடுத்தது.

“அவர் பேசியது இருக்கட்டும். முதலில் நீ வந்து கடம்பன் பட ட்ரைலருக்கு டப்பிங் பேசு,” என எடிட்டர் ரூபன் கலாய்த்துவிட்டார்.

You might also like More from author

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com