ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான ஷேன் டைட் இந்தியாவில் குடி உரிமை பெற்றுள்ளார்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து  வீச்சாளரான ஷேன் டைட் இந்தியாவில் குடி உரிமை பெற்றுள்ளார்.

2010ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடரின் போது ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷேன் டைட்டிற்கும் இந்திய மாடல் மாஷீம் சின்ஹா(Mashoom Singha) விற்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டனர்.

இந்திய பெண்ணை திருமணம் செய்து கொண்டதன் மூலம்  இந்திய குடியிரிமையை பெற்றுள்ள டைட் வருங்காலத்தில் இந்திய அணியிலும் இடம்பெறலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் ஐ.சி.சி.,ன் சட்டவிதிகளின்படி ஒரு வீரர் அடுத்த நாட்டிற்காக விளையாடுவதற்கு முன்பாக 4 வருடங்கள் தனது சொந்த நாட்டு அணிக்காக விளையாடாமல் இருக்க வேண்டும் என்பதால் 2020ம் ஆண்டிற்கு பிறகு டைட் இந்திய அணியில் இடம்பெறலாம்.

வெல்கம் டூ இந்தியா..

You might also like More from author