இங்கிலாந்து அணி உணவு இடைவேளை வரை ஒரு விக்கெட் இழப்புக்கு 117 ரன்கள் சேர்ப்பு

இந்தியாவுக்கு வந்துள்ள அலஸ்டயர் குக்

தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. ராஜ்கோட்டில் நடந்த முதலாவது டெஸ்ட் ‘டிரா’ ஆனது. விசாகப்பட்டினம், மொகாலி டெஸ்டுகளில் முறையே இந்திய அணி 246 ரன், 8 விக்கெட் வித்தியாசங்களில் வெற்றி பெற்று தொடரில் 2–0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா–இங்கிலாந்து இடையிலான 4–வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று துவங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை துவக்கிய இங்கிலாந்து மதிய  அணி உணவு இடைவேளை வரை ஒரு விக்கெட் இழப்புக்கு 117 ரன்கள் சேர்த்துள்ளது. இங்கிலாந்து அணியின் கேப்டன் குக் 46 ரன்களில் ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார்.  கேடன் ஜென்னிங்ஸ் 65 ரன்களிலும் ஜோ ரூட் 5 ரன்களிலும் பேட்டிங் செய்து வருகின்றனர்.

You might also like More from author