இசையமைப்பாளர் அவதாரம் எடுத்த சிம்பு

சந்தானத்தின் சக்கை போடு போடு ராஜா படத்திற்காக சிம்பு இசையமைப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார். சிம்பு நடிகர் மட்டும் அல்ல இயக்குனர், பாடகரும் கூட. இந்நிலையில் நண்பன் சந்தானத்திற்காக புதிய அவதாரம் எடுத்துள்ளார். விடிவி கணேஷ் தயாரிப்பில், சேதுராமனின் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் படம் சக்கை போடு போடு ராஜா.

வைபவி, விவேக், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடிக்கும் இது ஒரு காமெடி படமாகும். இந்த படத்திற்காக சிம்பு இசையமைப்பாளர் ஆகிறார். இது குறித்து சந்தானம் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, என் காட்பாதர் எஸ்டிஆர் சக்கை போடு போடு ராஜாவுக்காக முதல்முறையாக இசையமைப்பாளர் ஆகிறார். #Grateful #Blessed என தெரிவித்துள்ளார்.

https://twitter.com/iam_str/status/810379194614083584

சந்தானத்திற்காக சக்கை போடு போடு ராஜாவுக்காக முதல்முதலாக இசையமைப்பாளர் ஆகிறேன். புதிய பயணம் துவங்குகிறேன். உங்களின் அன்பும், ஆசியும் தேவை

You might also like More from author

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com