இசை, டீசர், டிரைலர் குறித்த அதிரடி அறிவிப்பை வெளியிட்ட `2.0′ படக்குழு

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் `2.0′.

லைகா புரடொக்‌ஷன்ஸ் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் பாலிவுட் பிரபலம் அக்ஷய்குமார் வில்லனாகவும், எமி ஜாக்சன் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் சுமார் ரூ.400 கோடியில் உருவாகி வரும் `2.0′ படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. படத்தை வியாரமும் சூடுபிடித்து நல்ல விலைக்கு விற்பனையாகி வரும் நிலையில், `2.0′ படத்தின் பாடல், டிரைலர் குறித்து ரசிகர்கள் அதீத எதிர்பார்பில் இருக்கின்றனர்.

அவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், `2.0′ படக்குழு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து லைகா புரடொக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ராஜு மகாலிங்கம் அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

“திருவிழா தொடங்குகிறது.. 2.0 படத்தின் இசை துபாயில் வருகிற அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படுகிறது. அதனைத் தொடர்ந்து நவம்பர் மாதம் ஐதராபாத்தில் டீசரும், டிசம்பர் மாதம் சிங்கார சென்னையில் டிரைலரும் வெளியிடப்படுகிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

படம் அடுத்த ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

You might also like More from author