இடப் பிரச்சனை பாட்டி – பேரனை தாக்கிய 4 பேர் கைது

திருவண்ணாமலை, ஜன 8

திருவண்ணாமலை மாவட்டம் வெறையூர் அருகே புறம்போக்கு
இடம் தொடர்பான பிரச்சனையில் பாட்டி_பேரனை தாக்கிய நான்கு பேரை போலீசார்
கைது செயது விசாரித்து வருகின்றனர். வெறையூர் அருகே அண்டம்பள்ளம்
கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ்(28). விவசாயி. இவரது நிலம் அருகே 10
சென்ட் புறம்போக்கு இடம் உள்ளது.இந்த இடத்தை அனுபவிப்பது குறித்து
இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மூர்த்தி (55) என்பவருக்கும் தகராறு
மற்றும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 31ந் தேதி
மூர்த்தி அந்த புறம்போக்கு இடத்தில் வீடு கட்ட  பள்ளம் எடுத்துள்ளார்.
இதனை அறிந்த செல்வராஜ் இது குறித்து மூர்த்தியிடம் கேட்க இருவருக்கும்
தகராறு ஏற்பட்டதில் மூர்த்தியுடன் சிவா(30),மாணிக்கம்(28),மற்றும்
பூமிநாதன்(24) ஆகியோர் செல்வராஜை தகாத வார்த்தைகளால் திட்டியும்,இரும்பு
மற்றும் கருங்கல்லால்  தாக்கியும் இரத்த காயம் ஏற்படுத்தியுள்ளனர். இதனை
தடுத்த அவரது பாட்டி அலங்காரத்தையும்(65) தாக்கியுள்ளனர். காயம் அடைந்த
செல்வராஜ் மற்றும் அவரது பாட்டி அலங்காரம் ஆகியோர் சிகிச்சைக்காக
திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்த பின் வெறையூர் போலீசில் அளித்த
புகாரின் பேரில் எஸ்ஐ மதியழகன் வழக்கு பதிவு செய்து மூர்த்தி, சிவா,
மாணிக்கம், பூமிநாதன் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

You might also like More from author