இந்தியாவுக்கு எதிராக பாக். ராணுவம் தீவிரவாதக் குழுக்களுக்கு உதவுகிறது: அமெரிக்க நிபுணர்கள் அறிக்கை

பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக தீவிரவாத இயக்கங்களை இயக்கி வருகிறது என்று அமெரிக்காவைச் சேர்ந்த தெற்காசிய நிபுணர்கள் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளனர்.

வரும் வெள்ளியன்று வெளியிடப்படும் இந்த அறிக்கையை அமெரிக்காவின் 10 தெற்காசிய நிபுணர்கள் தயாரித்து அளித்துள்ளனர். “பாகிஸ்தானுடனான புதிய அமெரிக்க அணுகுமுறை: உறவுகளை முறிக்காமல் உதவிக்கான சூழ்நிலைமைகளை அமலாக்கம் செய்தல்” என்ற தலைப்பில் இந்த அறிக்கை தயாராகியுள்ளது.

இதில் இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதத் தாக்குதலை முடுக்கி விட்டு நாட்டை நிலைகுலையச் செய்யும் திட்டமும் காஷ்மீர் விவகாரத்தில் உலக நாட்டு தலையீடு தேவை என்ற கவன ஈர்ப்பைச் செய்வதற்கும் பாகிஸ்தான் ராணுவம் திட்டமிடுவதாக இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்திய பாகிஸ்தான் தலைவர்கள் மேற்கொள்ளும் அமைதிப் பேச்சு வார்த்தைகளை முறியடிக்கும் நோக்கத்துடன் பாகிஸ்தான் ராணுவம் செயல்பட்டு வருவதாகவு, இது குறிப்பாக 1999-ம் ஆண்டு கார்கில் போர் மற்றும் அதற்குப் பிறகு அதிகரித்துள்ளது என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

“இந்தியாவை தங்களது இருப்புக்கு எதிரான சக்தியாக பார்க்கும் பாகிஸ்தான் தீவிரவாதக் குழுக்களை தங்கள் பாதுகாப்பு மற்றும் அயலுறவுக் கொள்கையின் ஒரு அங்ககமாக்வே கருதி பயன்படுத்தி வருகிறது. ஆனால் வெளியிலிருந்து பார்க்கும் போது இந்தியா மீதான பாகிஸ்தானின் பீதி/வெறி நிலைமைகளுக்கான அடிப்படைகள் எதுவும் இல்லை” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், ஆப்கன் மற்றும் கூட்டுப்படையினரை எதிர்த்துப் போராடும் சில தீவிரவாதக் குழுக்களை ஆதரித்து வரும் பாகிஸ்தான் தனது இந்தச் செயல்பாடு குறித்து ஒரு போதும் மறுபரிசீலனை செய்யவில்லை, மாற்றிக் கொள்ளவில்லை. இதன் மூலம் பயங்கரவாதிகளின் புகலிடமாக ஆப்கான் ஆகிவிடக்கூடாது என்பதற்கான அமெரிக்க முயற்சிகளை பாகிஸ்தான் மறைமுகமாக தடை செய்து வருகிறது.

“பாகிஸ்தான் தனது அணு ஆயுத உற்பத்தியை பரவலாக்கம் செய்துள்ளதும், போருக்கான அணு ஆயுதங்களை தயாரிப்பதும், ஏவுகணை சோதனைகள் நடத்துவதும் கவலையளிப்பதாக உள்ளது, குறிப்பாக இந்தியாவின் பார்வையிலிருந்து” என்று கூறும் இந்த அறிக்கை தயாரிப்பு குழுவில் தி ஹெரிடேஜ் பவுண்டேஷனைச் சேர்ந்த லிசா கர்டிஸ், மற்றும் பாகிஸ்தானுக்கான முன்னாள் அமெரிக்க தூதர் ஹுசைன் ஹக்கானி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குழுவில் உள்ள மற்றவர்கள் விவரம்: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஜான் கில், நியு அமெரிக்காவைச் சேர்ந்த அனிஷ் கோயல், புரூக்கிங்ஸ் இன்ஸ்டிட்யூஷனிலிருந்து புரூஸ் ரெய்டல், கல்வியியலாளர் டேவிட் செட்னி, மத்திய கிழக்கு இன்ஸ்டிட்யூட்டைச் சேர்ந்த மர்வின் வெய்ன்பாம்.

ஆப்கன் தாலிபான், ஹக்கானி நெட்வொர்க் மற்றும் பிற பயங்கரவாதக் குழுக்களை பாகிஸ்தான் ஆதரிப்பது மட்டும் ஆப்கானின் பாதுகாப்பு சவால்களுக்கு காரணமல்ல என்பதை அமெரிக்கா அறிந்திருந்தாலும், இந்தக் குழுக்கள் பாகிஸ்தானில் பாதுகாப்பாக செயல்பட்டு வருவது மற்ற பிரச்சினைகளை தீர்ப்பதிலும் சிக்கல்களை தோற்றுவிக்கிறது என்று இந்த அறிக்கை கூறுகிறது.

மேலும், தீவிரவாதத்தை பாகிஸ்தான் பொறுத்தருள்வது அந்த நாட்டையே சிக்கலுக்குள்ளாக்கியுள்ளது, மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுக்கு கடும் நெருக்கடிகளையும், முதலீட்டுச் சூழலையும் அச்சுறுத்தி வருகிறது. இதனால் தன் சொந்த நாட்டு அப்பாவி மக்களையே பலி கொடுத்து வருகிறது

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

You might also like More from author

Facebook Auto Publish Powered By : XYZScripts.com