இந்தியா ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் வார்னர் உமேஷ் யாதவ் வேகத்தில் ஸ்டெம்பை பறிகொடுத்தார்

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி  இந்தியாவுடன் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. தொடரின் முதல் போட்டி புனேவில்  இன்று தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதனை தொடர்ந்து டேவிட் வார்னர் மற்றும் ரென்ஷா அகியோர் ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.

தொடர்ந்து நிதானமாக விளையாடி வந்த வார்னர் 38 ரன்கள் எடுத்திருந்தபோது உமேஷ் யாதவ் வேகத்தில் ஸ்டெம்பை பறிகொடுத்து வெளியேறினார்.

இதன் மூலம் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 1 விக்கெட்டை  இழந்து 84 ரன்கள் எடுத்துள்ளது.

You might also like More from author