Mar 29, 2017
29 Views
0 0

இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் தொடரை துபாயில் நடத்த அனுமதி கோரி கடிதம் எழுதியுள்ளது.

Written by
banner

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடரை துபாயில் நடத்த அனுமதி கோரி உள்துறை அமைச்சகத்திற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கடிதம் எழுதியுள்ளது.

வருகிற செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் இந்த கிரிக்கெட் தொடரை நடத்த கடிதத்தில் அனுமதி கோரப்பட்டுள்ளதாக பிசிசிஐ வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னர் இந்தியா மீது பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தியதையடுத்து இரு நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை.

பிசிசிஐ தலைவராக ஷஷாங் மனோகர் இருந்த போது, இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே குறுகிய கால கிரிக்கெட் தொடரை நடத்த முயற்சி முன்னெடுக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசு அதற்கு அனுமதி அளிக்கவில்லை.

இந்நிலையில் தற்போது துபாயில் கிரிக்கெட் தொடர் நடத்த அனுமதி அளிக்க கோரி உள்துறை அமைச்சகத்திற்கு பிசிசிஐ சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ள பிசிசிஐ நிர்வாகி ஒருவர், உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி கேட்டு கடிதம் எழுதியுள்ளதாகவும், இந்த விவகாரத்தில் அரசின் நிலை என்ன என்பது பற்றி தெரியவில்லை எனவும் கூறினார்.

மேலும் கடந்த முறை இருநாடுகளுக்கு இடையே பதற்றம் நிலவியது. தற்போது எதிர்கால கிரிக்கெட் தொடர் அட்டவணையை நிறைவேற்ற வேண்டும் என்ற சூழல் உள்ளது.

இதனால் தான் பாகிஸ்தானுடன் கிரிக்கெட் தொடர் நடத்த பிசிசிஐ விரும்புகிறது என்றார்.

ஆனால் பாகிஸ்தானுடனான கிரிக்கெட் தொடரை நடத்த அரசின் அனுமதி இல்லாமல் பிசிசிஐ எதுவும் செய்யாது என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மத்திய அரசாங்கம் அனுமதி அளிக்கும் பட்சத்தில் துபாயில் இரு அணிகளுக்கும் இடையிலான தொடரை ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.

Article Categories:
விளையாட்டு

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *