டோனி இன்னுமா என்னை இம்சை பண்ணுறீங்க, போங்க வீட்டுக்கு போய் தூங்குங்க, என கூறியுள்ளார்.

டோனியை விடாமல் பத்திரிக்கையாளர்கள் விரட்டியதால், வீட்டுக்கு போய் தூங்குங்க என்று டோனி பத்திரிக்கையாளர்களிடம் கோபமாக கூறியுள்ளார்.

இந்திய அணியின் மூன்று வித போட்டிகளிலும் தலைவராக இருந்த டோனி, சில வருடங்களுக்கு முன்னர் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார்.

அதன் பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐபிஎல்லின் புனே அணிக்கான தலைவர் பதவியில் இருந்து விலகினார்.

தற்போது அவர் உள்ளூரில் நடக்கும் விஜய் ஹசாரே தொடருக்காக ஜார்கண்ட் அணிக்கு தலைவராக பொறுப்பேற்று விளையாடி வருகிறார். இவர் தலைமையிலான ஜார்கண்ட் அணி நேற்று அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் அத்தொடருக்காக டோனி பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது பத்திரிக்கையாளர்கள் டோனியிடம் சில கேள்விகள் கேட்க வேண்டும் என்று முயற்சி செய்துள்ளனர். ஆனால் டோனியோ பத்திரிக்கையாளரை சந்திக்க விருப்பமில்லை என தெரிவித்துள்ளார்.

இருப்பினும் பத்திரிக்கையாளர்கள் டோனியை விடாமல் பின் தொடர்ந்து கேள்வி எழுப்பியுள்ளனர்.

அப்போது டோனி சற்று ஆக்ரோசமாக இன்னுமா என்னை இம்சை பண்ணுறீங்க, போங்க வீட்டுக்கு போய் தூங்குங்க, என கூறியுள்ளார்.

இதனால் எப்போது கூலாக காணப்படும் டோனி, தற்போது ஏன் இப்படி கோபமாக உள்ளார் என்றும் இதற்கு என்ன காரணம் இருக்கும் என்றும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

You might also like More from author