இன்று நடக்கும் நூல் கண்காட்சி -ஆட்சியர் தொடங்கிவைக்கிறார்

திருவண்ணாமலை, ஏப் 23:

திருவண்ணாமலையில் உலக புத்தக தினவிழாவையட்டி நாளை நடைபெறும் நூல் கண்காட்சியை ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தொடங்கிவைத்து பரிசு வழங்குகிறார். திருவண்ணாமலை தியாகி நா.அண்ணாமலைபிள்ளை மேல்நிலைப்
பள்ளி வளாகத்தில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக கலையரங்கில் தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறை, தி.மலை மாவட்ட மைய நூலகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் உலக புத்தக தினவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது. இவ்விழாவுக்கு வருகை தரும் அனைவரையும் நல்நூலகர் த.வெங்கடேசன் வரவேற்கிறார், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார், மாவட்ட நூலக அலுவலர் இரா.சண்முகநாதன் ஆகியோர் முன்னிலை வகிக்க, சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே விழாவுக்கு தலைமையேற்று நூல் கண்காட்சியை தொடங்கிவைத்து பரிசுகள் வழங்குகிறார். எழுத்தாளர் சா.தேவதாஸ் நாமும் நூலகமும் என்ற தலைப்பில் உரையாற்றவுள்ளார். மாவட்ட வருவாய் அலுவலர் இரா.உமாமகேஸ்வரி, சண்முகா கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயலாளர் என்.குமார், வாசகர் வட்ட சிறப்பு தலைவர் ஆகாசு. முத்துகிருட்டினன், வாசகர் வட்ட தலைவர் நூலக ஆர்வலர் அ.வாசுதேவன், ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்க பேச்சருவி கு.சபரி வழங்கும் சிந்தனை நகைச்சுவை
பட்டிமன்றமும் நடைபெறவுள்ளது. முடிவில் நல்நூலகர் அ.சாயிராம் நன்றியுரையாற்றுகிறார்.

You might also like More from author