இயக்குநர் சசிகுமாரின் மேனேஜர் அசோக் குமார் தற்கொலை! அதிர்ச்சியில் திரையுலகம் !

சசிகுமாரின் மேனேஜர் அசோக் குமார் தற்கொலைக்குக் காரணமான பைனான்சியர் – தயாரிப்பாளர் மதுரை அன்புச் செழியனைக் கைது செய்யக் கோரி போலீசில் புகார் அளித்துள்ளனர் இயக்குநர்கள் சசிகுமார், அமீர் மற்றும் சமுத்திரக் கனி ஆகியோர். 40 வயதான அசோக்குமார் இன்று அபிராமபுரத்தில் உள்ள தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திரையுலகில் அவரை பெரும்பாலானோருக்கு நன்கு தெரியும் என்பதால், அசோக்கின் தற்கொலை பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. சசிக்குமாரின் அத்தை மகன்தான் அசோக் குமார். சசிக்குமாருடன் இணைந்து செயல்பட்டு வந்தார். கந்து வட்டிக்கு அவர் தற்கொலை செய்திருப்பது திரையுலகை உலுக்கியுள்ளது.

தனது தற்கொலைக்கு முழுக்க முழுக்க காரணம் என்று பைனான்சியர் மதுரை அன்புச் செழியனைக் குறிப்பிட்டுள்ளார். அவரது சித்திரவதை தாங்காமல்தான், வேறு வழியின்றி தற்கொலை செய்து கொண்டதாக தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார் தனது கடிதத்தில்.

இதைத் தொடர்ந்து அன்புச் செழியனை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று இயக்குநர்கள் சசிகுமார், அமீர், சமுத்திரக் கனி உள்ளிட்டோர் வடபழனி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

தற்கொலை செய்து கொண்ட மேனேஜர் அசோக்குமார், கம்பெனி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் மேனேஜர் மற்றும் இணை தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

அசோக்குமாரின் மரணத்தை தமிழ்த் திரையுலகம் எப்படி கையாளப் போகிறது என்பது தெரியவில்லை. மேலும் அன்புச் செழியன் மீது புகார்கள் வருவது முதல் முறையல்ல என்பதால் இந்தமுறையாக உறுதியான நடவடிக்கையில் அது இறங்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

You might also like More from author

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com