இரட்டை இலை சின்னம் கிடைக்கவில்லை என்றால் ஆர்.கே நகர் போட்டியிலிருந்து டிடிவி தினகரன் விலக முடிவு

இரட்டை இலை சின்னம் கிடைக்கவில்லை என்றால் ஆர்.கே நகர் போட்டியிலிருந்து டிடிவி தினகரன் விலக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதா மறைவால் காலியாக உள்ள ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 12ஆம் திகதி நடைப்பெறவுள்ளது.

அதிமுக சார்பில் அதன் துணைப்பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும், ஓ.பி.எஸ் அணி சார்பில் மதுசூதனனும், திமுக சார்பில் மருது கணேஷ்ம் களத்தில் உள்ளனர்.

இதனிடையில் டிடிவி தினகரன் ஆர்.கே நகரில் மிக பெரிய தோல்வியை சந்திப்பார் என உளவு துறை அவரிடம் அதிர்ச்சி அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அவருக்கு வெறும் 30 ஆயிரம் ஓட்டுகள் மட்டுமே கிடைக்கும் எனவும் தொகுதியில் தினகரனுக்கு 90 சதவீத மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்பதும் தெரியவந்துள்ளது.

இதனிடையில், இரட்டை இலை சின்னம் சசிகலா அணிக்கு கிடைக்காமல், ஓ.பி.எஸ் அணிக்கு கிடைத்தால் போட்டியிலிருந்து விலகும் முடிவுக்கு தினகரன் வந்துவிட்டதாக கூறப்படுகிறது.

அவருக்கு பதிலாக மாற்று வேட்பாளர் குறித்து தினகரன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

You might also like More from author

Facebook Auto Publish Powered By : XYZScripts.com