Jan 3, 2017
0 View
0 0

இரண்டு பொலிசாரை சுட்டு விட்டு தப்பிய மர்ம நபர்: சுவிஸில் பரபரப்பு

Written by
banner

சுவிட்சர்லாந்து நாட்டில் இரண்டு பொலிஸ் அதிகாரிகளை சுட்டு விட்டு தப்பிய மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியுடன் சுற்றி திரிவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுவிஸின் Appenzell Ausserrhoden மாகாணத்தில் உள்ள Rehetobel நகரில் தான் இந்த பயங்கர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இன்று காலை 9 மணியளவில் வீடு ஒன்றில் பொலிசார் இருவர் பரிசோதனையில் ஈடுப்பட்டு வந்துள்ளனர்.

அப்போது, வீட்டில் இருந்து தப்பிய 33 வயதான நபர் ஒருவர் பொலிசாரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு விட்டு அங்கிருந்து தப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், பொலிசார் இருவரும் ஆபத்தான நிலையில் உள்ளனரா என்ற உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

மேலும், துப்பாக்கி சூடு நடத்திய நபர் தலைமறைவாகியுள்ளதாகவும் அவரை பொலிசார் தீவிரமாக தேடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Article Categories:
உலகம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Facebook Auto Publish Powered By : XYZScripts.com