Home தமிழகம் இராமநாதபுரம் மாவட்டத்தில் தார் சாலை அமைத்ததில் 65 லட்சம் மோசடி. கூடுதல் இயக்குனர் விசாரணை.

இராமநாதபுரம் மாவட்டத்தில் தார் சாலை அமைத்ததில் 65 லட்சம் மோசடி. கூடுதல் இயக்குனர் விசாரணை.

54

இராமநாதபுரம் மாவட்டம் சவேரியார்சமுத்திரத்தில் சாலை அமைத்ததாக 65 லட்சத்து 12 ஆயிரம் மோசடி செய்த விவகாரம். சிறப்புத் திட்ட அமலாக்கத் துறை கூடுதல் இயக்குனர் இராமநாதபுரத்தில் அரசு அதிகாரிகள் உட்பட 7 பேரிடம் ரகசிய விசாரனை.

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா சவேரியார்சமுத்திரம் முதல் மேலச்சிறுபோது வரை 3 கிலோமீட்டருக்கு தார் சாலை அமைக்க 65 லட்சத்து 12 ஆயிரத்திற்கு கடந்த 2008ம் ஆண்டு சவேரியார்பட்டினத்தைச் சேர்ந்த அந்தோனியம்மாள் ஒப்பந்தம் எடுத்திருந்தார். ஆனால் அந்த சாலை அமைக்காமல் பணம் மோசடி செய்ததாக மேலச்சிறுபோது கிராமத்தைச் சேர்ந்த சண்முகவேல் அப்போதைய மாவட்ட ஆட்சித் தலைவர் ஹரிஹரன், மாவட்;ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சுமதியிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் உயர்நீதி மன்ற மதுரை கிளையில் நடவடிக்கை கோரி மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உயர்நீதி மன்றம் வழக்கறிஞர் சீமைராஜ் தலைமையில் சட்ட ஆணையம் அமைத்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரனை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அதன்படி விசாரனை செய்ததில் மோசடி நடைபெற்றது தெரியவந்தது. இதனையடுத்து விசாரனை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதி மன்றம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தது. இதனையடுத்து தமிழக அரசு இராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி கலாவதியை விசானை செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. அந்த விசாரனையிலும் மோசடி நடைபெற்றது தெரியவந்தது. ஆனால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காத தமிழக அரசு சிறப்பு திட்ட அமலாக்கத்துறை கூடுதல் இயக்குனர் வேதநாயகம் தலைமையில் மீண்டும் ஒரு விசாரனை குழுவை நியமித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் இன்று மாலை 3 மணிக்கு இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள 219 வது அறையில் ரகசிய விசாரனை நடைபெற்றது. புகார்தாரர் சண்முகவேல், நிலஅளவர், கிராம நிர்வாக அலுவலர், முதுகுளத்தூர் தாசில்தார், வருவாய் ஆய்வாளர் என 7 பேரிடம் மாலை 3 முதல் இரவு 9 மணி வரை ரகசிய விசாரனை நடைபெற்றது. மேலும் பலரிடம் நாளை விசாரனை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரனை குறித்து வேதநாயகத்திடம் கேட்டபோது பதில் கூற மறுத்துவிட்டார்.