Nov 30, 2016
7 Views
0 0

இருள் முடிவுக்கு வந்தது – அமெரிக்கவாழ் கியூப மக்கள்

Written by
banner

கியூபாவின் ஆட்சி

ஜனநாயக முறையில் இல்லாமல் புரட்சி மூலம் கியூபாவின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியவர் ஃபிடல் காஸ்ட்ரோ. இவரது ஆட்சிக்காலத்தில், ஆட்சிக்கு எதிரானவர்கள் கடுமையான முறையில் ஒடுக்கப்பட்டதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதன் காரணமாக, அண்டை நாடான அமெரிக்காவில் பலர் தஞ்சம் அடைந்தனர்.

தற்போது ஃபிடல் காஸ்ட்ரோ மறைந்துவிட்டதால், அதனை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வரும் அவர்கள், இது ஒரு தனி நபரின் மறைவை கொண்டாடுவது அல்ல என்றும், இருள் முடிவுக்கு வந்து வெளிச்சம் பரவத் தொடங்கி உள்ளதையே தாங்கள் கொண்டாடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

கியூபாவில் ஜனநாயகம் ஏற்பட்டால் மட்டுமே, அங்கு செல்ல முடியும் என தெரிவிக்கும் அமெரிக்க வாழ் கியூப மக்கள், இதற்கு தற்போதுள்ள கம்யூனிச அரசு வீழ்ச்சி அடைவது அவசியம் எனவும் கூறியுள்ளனர்.

கியூபாவில் ஜனநாயகம் இல்லை, தேர்தல் இல்லை, மக்களுக்கு சுதந்திரம் இல்லை என தெரிவிக்கும் அமெரிக்க வாழ் கியூப மக்கள், மிகுந்த வலியுடனேயே சொந்த நாட்டை விட்டு வெளியேறியதாகவும் தெரிவித்துள்ளனர்.

Article Categories:
உலகம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Facebook Auto Publish Powered By : XYZScripts.com