Home இந்தியா உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால் பைக்குகள் விலை அதிரடியாக குறைந்துள்ளது

உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால் பைக்குகள் விலை அதிரடியாக குறைந்துள்ளது

49

இந்தியாவில் பாரத் ஸ்டேஜ் -4 (பி.எஸ்.4) விதிமுறைகளை பூர்த்தி செய்யாத வாகனங்களை ஏப்ரல் 1 ஆம் திகதிக்கு பிறகு வாகன உற்பத்தி நிறுவனங்கள் விற்பனை செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால் பைக்குகள் விலை அதிரடியாக குறைந்துள்ளது.

பிஎஸ்-3 விதிப்படி தயாரிக்கப்பட்ட இருசக்கர வாகனங்களுக்கு ரூ.12,500 வரையிலான தள்ளுபடியினை இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

ஏப்ரல் 1 முதல் பிஎஸ்-4 கட்டுப்பாட்டு விதிகளை நிறைவு செய்யாத வாகனங்களின் விற்பனை மற்றும் பதிவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இதனால், பிஎஸ்-3 விதிப்படி தயாரிக்கப்பட்ட லட்சக்கணக்கான வாகனங்களின் விற்பனை பாதிக்கப்படும் என்று வாகன உற்பத்தியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவையடுத்து பிஎஸ்-3 விதிகளின்படி ஏற்கனவே தயாரிக்கப்பட்ட வாகனங்கள் மீது தள்ளுபடியினை வாகன உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர்.

இருசக்கர வாகன சந்தையில் முதலிடம் வகிக்கும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், பிஎஸ்-3 விதியின்படி தயாரிக்கப்பட்ட ஸ்கூட்டர்களுக்கு ரூ.12,500-ம், பிரீமியம் பைக்குகளுக்கு ரூ.7,500 மற்றும் மற்ற இருசக்கர வாகனங்களுக்கு ரூ.5,000-ம் தள்ளுபடியினை அறிவித்துள்ளது.

அதேபோல இருசக்கர வாகன விற்பனையில் இரண்டாவது இடத்தில் உள்ள ஹோண்டா நிறுவனம், பிஎஸ்-3 விதிப்படி தயாரிக்கப்பட்ட அனைத்து இருசக்கர வாகனங்களும் ரூ.10,000 தள்ளுபடியை அறிவித்துள்ளது. இந்த தள்ளுபடி அறிவிப்பானது மார்ச் 31 அல்லது ஸ்டாக் உள்ளவரை அளிக்கப்படும் என்று அந்த நிறுவனங்கள் அறிவித்துள்ளன.