உடல் எடையைக் குறைக்க எளிய வழிகள்

நவீன காலத்திற்கேற்ப அனைத்தும் நவீனமாக மாறி வரும் நிலையில், அனைவரது உணவுப் பழக்க வழக்கங்களும் மாறி வருகின்றன. எதற்கும் நேரமில்லாத காலத்தில், உணவைக் கூட ஃபாஸ்ட் ஃபுட்டாக உட்கொள்கிறோம்.

சரியான சத்து நிறைந்த உணவை உட்கொள்ளாமல், அதற்கேற்ற உடல் உழைப்பு இல்லாமல் உடல் பருமன் ஏற்பட நாமே காரணமாகி விடுகிறோம். பின் இந்த உடல் பருமனைக் குறைப்பதற்கு, ஜிம் போன்ற இடங்களுக்குச் சென்று உடம்பை ஸ்லிம்மாக்க செலவழிக்கிறோம்.

நாம் உட்கொள்ளும் உணவு முறைகளை சரிவரக் கடைபிடித்தாலே போதும் இதுபோன்ற சிரமத்தைத் தவிர்க்கலாம். உண்ணும் உணவுகளை உருப்படியாகத் தெரிந்துகொண்டு உண்ணப் பழகிக் கொண்டால், உடல் உருவிவிட்டது போல் சிக்கென இருக்கும் என்று எளிய டிப்ஸ்களை அள்ளித் தருகிறார் டாக்டர். சாருமதி…

சரியான டயட் மற்றும் ஜிம் சென்று கடுமையான உடற்பயிற்சி செய்வது போன்றவை பெரிதும் உதவும்.

எடையைக் குறைக்க தேன் ஒரு சிறந்த மருத்துவப் பொருள். ஆகவே, காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் நீரில் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டீஸ்பூன் தேன் மற்றும் சிறிது மிளகு தூள் சேர்த்து, தினமும் குடிக்க வேண்டும்.

உடல் எடையைக் குறைக்க டயட்டில் இருக்கும்போது பச்சை காய்கறிகள், தக்காளி மற்றும் கேரட் போன்ற கலோரி குறைவான, ஆனால் அதிக வைட்டமின் மற்றும் கனிமச் சத்துக்கள் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.

எப்போதும் உணவு உண்ணும் முன் ஒரு துண்டு இஞ்சியை, எலுமிச்சை சாறு மற்றும் உப்பில் தொட்டு சாப்பிட வேண்டும். இதனால் அதிகமான அளவு உணவை உண்ணாமல், கட்டுப்பாட்டுடன் உணவை உண்ணலாம்.

இரவு ஒன்று அல்லது இரண்டு வாழைப்பழம் மட்டும் சாப்பிட்டு வந்தால், உங்கள் உடல் எடையில் நல்ல மாற்றம் காணலாம். மற்றும் உங்கள் உடலுக்கு தேவையான கலோரிகள் மொத்தமும் அந்த ஓர் வாழைப்பழத்திலேயே இருக்கிறது என்பது நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயமாகும்.

ஓட்ஸ் உணவு கொழுப்புச் சத்து இல்லாத ஓர் சிறந்த உணவு. இது, உடல் எடையைக் குறைக்க சீரிய முறையில் உதவும். அரை கப் ஓட்ஸ் உணவு போதுமானது.

தானிய உணவுகளை வேக வைத்து சிறிதளவு உப்பு மட்டும் சேர்த்து சாப்பிட்டு வந்தாலே, உங்கள் எடையில் நல்ல மாற்றத்தைக் காண இயலும்.

இரவு நேரத்தில் இரண்டு அல்லது மூன்று வேக வைத்த முட்டைகள் சாப்பிடலாம். வெள்ளை கரு மட்டும். வயிறு நிறையாவிட்டாலும், உடலுக்குத் தேவையான சத்துகள் மொத்தமும் இதில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இரவு ஓர் டம்ளர் கொழுப்பு நீக்கப்பட்ட பால் குடித்து வந்தால் ஓர் மாதத்திற்குள் உங்கள் உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காண இயலும்.

உடல் எடை குறைக்க நினைப்பவர்கள், அறவே மறக்க வேண்டிய உணவுகள் என்றால் அது நொறுக்குத் தீனிகள்தான். இதனால் தான் பெரும்பாலானவர்களின் டயட் சீர்குலைந்து போகிறது.

மேலும் இதுபோன்ற எளிய டிப்ஸ்களுக்கு ஜி.சி.டி நேட்சர்ஸ் கிஃப்ட், ஹெர்பல் & ஆயுர்வேதிக் நிலையம், 7402081981 என்ற எண்ணில் டாக்டர் சாருமதியை தொடர்பு கொள்ளலாம்.

You might also like More from author