Home இந்தியா உத்தரப்பிரதேச முதல்வர் பான்மசாலா, புகையிலை பொருட்களை அப்புறப்படுத்தும்படி உத்தரவிட்டார்

உத்தரப்பிரதேச முதல்வர் பான்மசாலா, புகையிலை பொருட்களை அப்புறப்படுத்தும்படி உத்தரவிட்டார்

15

உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல்வராக பதவியேற்ற யோகி ஆதித்யாநாத் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், அடுத்த அதிரடியாக, தலைமைச் செயலகம் உள்பட அனைத்து அரசு அலுவலகங்களிலும், குட்கா மற்றும் பான்மசாலா, பொருட்கள் பயன்படுத்தத் தடை விதித்துள்ளார்.

முதற்கட்டமாக, அரசு தலைமைச் செயலகத்தில் இன்று திடீர் சோதனை நடத்திய முதல்வர் ஆதித்யநாத், அங்கு பறிமுதல் செய்யப்பட்ட பான்மசாலா, புகையிலை பொருட்களை அப்புறப்படுத்தும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும், இந்த அதிரடி உத்தரவை மாநிலம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் பின்பற்றும்படி உத்தரவிட்டார். தவறும்பட்சத்தில் அரசு ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவுறுத்தினார்.