உலக அழகியாக இந்தியாவின் மானுஷி சில்லார் தேர்வு..!வரலாறு படைத்த இந்திய அழகி!

சீனாவின் சான்யா சிட்டியில் நடைபெற்ற 2017-ம்ஆண்டின் உலக அழகி போட்டியில் இந்தியாவை சேர்ந்த மானுஷி சில்லார் தேர்வு செய்யப்பட்டார்.

20 வயதாகும் இவர் அரியானா மாநிலத்தை சேர்ந்தவராவார். 

இவர் ஏற்கனவே மிஸ் இந்தியாவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.

17 ஆண்டுகளுக்கு பின், மிஸ் வோல்டு பட்டத்தை இந்திய அழகி ஒருவர் வென்றுள்ளார்.

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த மனுஷி சில்லார்(20), மருத்துவப் பட்டப் படிப்பை பயின்று வருகிறார். இவர் சீனாவின் சன்யா சிட்டி அரினாவில் 108 நாடுகள் பங்கேற்ற மிஸ் வோல்டு அழகிப் போட்டியில் வென்று சாதனை படைத்துள்ளார்.

இவருக்கு 2016ஆம் ஆண்டு மிஸ் வோல்டு பட்டம் வென்ற போர்டா ரிகாவின் ஸ்டீபனி டெல் வல்லே, மகுடம் சூட்டி கௌரவித்தார்.

உலக அழகி பட்டத்தை பெறும் 6வது பெண் மனுஷி சில்லார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் முறையாக இந்தப் பட்டத்தை வென்ற இந்திய அழகி ரீட்டா ப்ரியா ஆவார். இவர் 1966ம் ஆண்டு இப்பட்டத்தை வென்றார். அதன் பின்னர் 1994ல் ஐஸ்வர்யா ராய், 1997ல் டயானா ஹெய்டன், 1999ல் யுக்தா முகி ஆகியோர் மிஸ் வேல்டு பட்டம் வென்றனர்.
2000வது ஆண்டில் பிரியங்கா சோப்ரா மிஸ் வேர்ல்ட் ஆனார். அதன் பின்னர் இந்திய அழகிகள் யாரும் கடந்த 17 வருடமாக பட்டம் பெறவில்லை. தற்போது மனுஷி இந்த இடைவெளியை நிரப்பியுள்ளார்.

உலக அழகி பட்டம் வென்றது குறித்து மேடையில் பேசிய மனுஷி “தனக்கு மிகப்பெரும் ஊக்கமாக இருந்த தாய்க்கு நன்றி தெரிவித்தார். வாழ்வில் பணம் ஒரு பொருட்டே அல்ல அன்பும், மரியாதையுமே முக்கியம், இதற்கு சரியான உதாரணம் அம்மா தான்” என்று தெரிவித்தார்.

 

You might also like More from author