டெஸ்ட் போட்டிகளில் உலக சாதனையை ரவீந்திர ஜடேஜா படைத்துள்ளார்

டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 150 விக்கெட்களை வீழ்த்திய இடது கை பந்துவீச்சாளர் என்ற உலக சாதனையை ரவீந்திர ஜடேஜா படைத்துள்ளார்.

இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது, இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கொழும்புவில் நடந்து வருகிறது.

இதில் தனது முதல் இன்னிங்சில் இலங்கை 183 ஓட்டங்களில் சுருண்டது, இந்திய அணி சார்பில் ஜடேஜா 2 விக்கெட்களை கைப்பற்றினார்.

இதன் மூலம் அதிவேகமாக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய இடது கை பந்துவீச்சாளர் என்ற சாதனையை அவர் பெற்றுள்ளார்.

32 டெஸ்ட் போட்டிகளில் இந்த விக்கெட்டுகளை ஜடேஜா எட்டியுள்ளார், இதற்கு முன்னர் அவுஸ்திரேலியாவின் இடது கை பந்து வீச்சாளர் ஜான்சன் 34 போட்டிகளில் 150 விக்கெட்களை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

You might also like More from author

Facebook Auto Publish Powered By : XYZScripts.com