ஊட்டியில் பனிப்பொழிவு : கருகும் தேயிலை செடிகள்

நீலகிரி மாவட்டத்தில், பனியின் தாக்கம் அதிகரித்துள்ளதால், தேயிலை செடிகள் கருகி வருகின்றன. நீலகிரியில், நவ., – ஜன., வரை பனிக்காலம்;

பகல் நேரத்தில் வெயிலும், மாலையில் குளிரும், இரவில் கடும் பனிப்பொழிவும் காணப்படும். ஊட்டி, குன்னுார் பகுதிகளில், தற்போது பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. ஊட்டியில், குறைந்தபட்சம், 5- முதல், 7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவுகிறது. மாவட்டத்தின் பல இடங்களில், தேயிலை செடிகள், பனியால் கருகியுள்ளன.

குன்னுார், கோவை ஏல மையங்களில், வாரந்தோறும் தேயிலைத் துாள் ஏலத்தில் விற்கப்படும்; குன்னுாரில், 10 முதல், 13 லட்சம் கிலோ தேயிலைத் துாள் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், வரும் வாரங்களில், வரத்து குறையும் சூழல் உள்ளது.

You might also like More from author