எரிவாயு சிலிண்டர் மீது கூடுதல் பணம் வசூல் செய்வதை கண்டித்து நுகர்வோர்கள் போராட்டம்

திருவண்ணாமலை, மார்ச் 7:

எரிவாயு சிலிண்டர் மீது கட்டணத்தைவிட கூடுதல்
பணம் வசூலிப்போர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருவண்ணாமலை மாவட்ட
ஆட்சியரகம் முன்பு நுகர்வோர்கள் நேற்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திருவண்ணாமலை மாவட்ட
அனைத்து நுகர்வோர்கள் சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று
(திங்கட்கிழமை) நுகர்வோர்கள் தலையில் எரிவாயு சிலிண்டர்களை
வைத்துக்கொண்டு நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில்
கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் நார்த்தாம்பூண்டி
ஜெ.சிவா தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தை வாழ்த்தி ஒருங்கிணைந்த
விவசாயிகள் உரிமை மீட்பு சங்க மாவட்ட செயலாளர் ஜி.சரவணன் கண்டன
உரையாற்றினார். நுகர்வோர்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட அளவிலும், கோட்ட
அளவிலும் நடத்தாதை கண்டித்தும், பிற மாவட்டஎல்லையில் சிலிண்டர் விநியோகம்
செய்வதை கண்டித்தும், நுகர்வோர்கள் கொடுக்கும் புகார் மனுமீது மாவட்ட
நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததைகண்டித்தும் விநியோகஸ்தர்கள் சிலிண்டர்
மீது கட்டணத்தைவிட கூடுதலாக ரூ. 40 முதல் 70 வரை அதிக பணம் வசூலிப்பதை
கண்டித்தும் போக்குவரத்து வாடகை நிர்ணயம் செய்யாததை கண்டித்தும்,
விநியோகஸ்தர்கள் சிலிண்டர் எடைபோட்டு தராமல் விநியோகிப்பதை கண்டித்தும்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நுகர்வோர்கள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏ.கே.சாமி, ஏ.துரைராஜ், ஏ.அய்யாயிரம், வாக்கடை
புருஷோத்தமன், உள்பட 100க்கும் மேற்பட்ட நுகர்வோர்கள், விவசாயிகள் கலந்து
கொண்டனர்

You might also like More from author