எஸ்கேபி பொறியியல் கல்லூரியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

திருவண்ணாமலை, பிப் 16:

திருவண்ணாமலை எஸ்கேபி பொறியியல் கல்லூரியில்
தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
தற்போது சூழலில் மின்சார தேவைகளை பூர்த்தி செய்யும் அதேவேளையில்
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் மின்சாரம் தயாரிக்கும்
முறைகளில் ஒன்றான காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்கும் நிறுவனமான கிரீன்
லீப் எனர்ஜி (பசுமை இலை ஆற்றல்) மூலம் அந்நிறுவனத்திற்கு தேவையான இளநிலை
பொறியாளர் பணிக்கான ஆட்களை தேர்வு செய்யும் வளாக நேர்காணல் திருவண்ணாமலை
எஸ்கேபி பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இவ்வளாக நேர்காணல்
தேர்வில் கல்லூரியின் முதல்வர் வெ.சுப்பிரமணிய பாரதி வரவேற்றார்.
அந்நிறுவனத்தின் மனிதவளத்துறை மேலாளர் சுதாகர் மாணவர்களை தேர்வு
செய்தார். சுமார் 250 மாணவர்கள் பங்கு பெற்ற இவ்வளாகத் தேர்வில் தேர்வு
செய்யப்பட்ட 16 மாணவர்களுக்கு கல்லூரியின் தலைவர் கு.கருணாநிதி வாழ்த்து
தெரிவித்தார். வளாக தேர்வுக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் வேலைவாய்ப்பு
மற்றும் பயிற்சி துறையினர் செய்திருந்தனர்.

You might also like More from author