எஸ்கேபி பொறியியல் கல்லூரியில் எம்படட் சிஸ்டம்ஸ் குறித்த செயல்முறை பயிற்சி

திருவண்ணாமலை, மார்ச் 16:

திருவண்ணாமலை எஸ்கேபி பொறியியல் கல்லூரியில்
மின்னணு மற்றும் தொலை தொடர்பு துறை சார்பில் மாணவர்களுக்கான 2 நாட்கள்
செயல்முறை பயிற்சி முகாம் நடந்தது. எம்படட் சிஸ்டம்ஸ் மற்றும் அதன்
தொழில்நுட்ப பயன்பாடுகள் என்னும் தலைப்பில் நடைபெற்ற இப்பயிற்சிக்கு
எய்சர் இன்போடெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் முதன்மை பொறியாளர்
ஆர்.சதீஷ் மாணவர்களுக்கு இத்துறையின் சிறப்புகள் குறித்தும் மாணவர்கள்
தங்கள் செயல்திட்டத்தை வடிவமைக்கும் வகையில் உள்ள பயன்பாடுகள் குறித்து
செயல்முறை பயிற்சி வகுப்புகள் எடுத்தார். இந்நிகழ்ச்சிக்கு மின்னணு
மற்றும் தொலை தொடர்பு துறை தலைவர் சரவணகுமார் தலைமை தாங்க, கல்லூரியின்
முதல்வர் டாக்டர் வி.சுப்பிரமணிய பாரதி முன்னிலை வகித்தார். மாணவர் சங்க
தலைவர் பிரசாந்த், அனைவரையும் வரவேற்று பேசினார். இப்பயிற்சியில் 50
மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை
பேராசிரியர்கள் அன்புச் செல்வன் விக்னேஷ்வரன் ஆகியோர் செய்திருந்தனர்.

You might also like More from author