Naangamthoon Tamil Daily news | Online Live News | Latest Current affair News | channel website Naangamthoon news Live tamil Cinema news ஏப்ரல் மாதம் முதல் அத்தியாவசிய மருந்துகளின் விலை 2 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளதாக தகவல் - Naangamthoon

ஏப்ரல் மாதம் முதல் அத்தியாவசிய மருந்துகளின் விலை 2 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளதாக தகவல்

வரும் ஏப்ரல் மாதம் முதல் அத்தியாவசிய மருந்துகளின் விலை 2 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்தியாவசிய மருந்துகளின் விலை ஏப்ரல் 1ம் தேதி முதல் 2 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மொத்த விலை குறியீட்டு எண் அடிப்படையில், இந்திய மருந்தக விலை ஆணையம், அனைத்து நிறுவனங்களையும் ஆண்டு விலை உயர்வு பெறுவதற்கான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளது.

பணவீக்கத்தில் ஏற்படும் மாற்றங்களை அடிப்படையாக கொண்டு, மருந்துகளின் விலை கட்டுப்பாட்டு ஆணையத்தின் கீழ் அத்தியாவசிய மருந்துகளின் விலை 2 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக வீழ்ச்சியில் இருந்த மருந்து நிறுவனங்கள், இந்த சிறிய விலை உயர்வு தங்களது நிறுவங்களின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கின்றனர்.. கடந்த ஒரு வருடத்தில் புற்றுநோய் மருந்துகளின் விலை 13-86 சதவீதம் குறைந்தது குறிப்பிடத்தக்கது.

You might also like More from author