ஐஸ்வர்யாவை கண்கலங்க வைத்த புகைப்பட கலைஞர்கள்!

நடிகை ஐஸ்வர்யா ராய், நேற்று உதடு பிளவுப்பட்ட 100 குழந்தைகளின் மருத்துவ சிகிச்சைக்கு உதவும் வகையில் தனியார் தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு தனது மகள் ஆராத்யாவுடன் சென்றார்.

ஐஸ்வர்யா வருவதை அறிந்து அங்கு ஏராளமான புகைப்பட கலைஞர்களும், பத்திரிகையாளர்களும் சூழ்ந்துகொண்டனர்.

புகைப்பட கலைஞர்கள் ஐஸ்வர்யா மற்றும் அவரது மகளை போட்டோ எடுக்க அதிக ஆர்வம் காட்டினார்.

இதனால் அவர்கள் கூச்சலிட்டதாக கூறப்படுகிறது. ஐஸ்வர்யா, அவர்களை வேண்டாம், இது படம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி அல்ல, குழந்தைகள் நிகழ்ச்சி, அவர்கள் பயப்படுகிறார்கள்என்று எவ்வளவோ சொல்லி பார்த்தார்.

ஆனால் புகைப்படக்காரர்கள் அதை கேட்கவில்லை. இதனால் ஒருக்கட்டத்தில் இவர்களின் செயலை பார்த்து கண்கலங்கி விட்டார். இந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

You might also like More from author