ஒரு லட்சம் மதிப்பிலான கரும்பு எரிந்து நாசம்

திருவண்ணாமலை, மார். 2:

திருவண்ணாமலை மாவட்டம் பெருந்துறைப்பட்டு
கிராமத்தில் மின் கசிவால் ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிலான கரும்ப பயிர்
எரிந்து நாசமானது குறித்து வாணபுரம் காவல்துறையினர் விசாரித்து
வருகின்றனர்.
வாணாபுரம் அடுத்த பெருந்துறைபட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்
செல்வநாராயணன்(42). விவசாயி. இவருக்கு உள்ள  4 ஏக்கர் நிலத்தில் ஒரு
ஏக்கரில் கரும்பு பயிரிட்டுள்ளார். இந்த நிலத்திற்கு நடுவில்
டிரான்ஸ்பார்மர் உள்ளது. இதனை மாற்ற கூறி பலமுறை மின்துறைக்கு மனுககள்
அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்
மின்கசிவால் இந்ந கரும்பு பயிர் எரிந்து சாம்பலாகி உள்ளது. உடன்
தண்டராம்பட்டு தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்துள்ளனர். தீயில்
எரிந்து சேதமான கரும்பின் மதிப்பு சுமார் ஒரு லட்சமாகும். இது குறித்து
வாணாபுரம் காவல்துறையினர் விசாரித்த வருகின்றனர்.

You might also like More from author

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com