ஒல்லிக்குச்சி உடம்புக்காரி..அப்படி இருந்த சின்ன குஷ்பு இப்படி ஆகிவிட்டார்..

ஹன்சிகாவின் சமீபத்திய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வரும் ஹன்சிகா அண்மையில் மலையாள திரையுலகிலும் அறிமுகமாகியுள்ளார். தற்போது ஹன்சிகாவின் மார்க்கெட் சரியில்லை. கோலிவுட்டில் ஒரு ரவுண்டு வந்த அவர் தற்போது வாய்ப்பு இல்லாமல் அல்லாடுகிறார்.

ஹன்சிகா பெயரை சொன்னதுமே அவர் பூசினாற் போன்று இருப்பது தான் ரசிகர்களுக்கு நினைவுக்கு வரும். ரசிகர்களும் அந்த ஹன்சிகாவை தான் பெரிதும் விரும்புகிறார்கள்.

புஸு புஸுன்னு இருந்த ஹன்சிகாவை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தது. இதனால் பலர் புஸு புஸுன்னு இருக்கும் பெண்களாக பார்த்து திருமணம் செய்தார்கள்.

ஹன்சிகா யோகா, டயட், ஜிம் என்று எது எதையோ செய்து உடல் எடையை வெகுவாக குறைத்தார். இந்நிலையில் தனது உடல் எடையை மேலும் குறைத்து எலும்பும் தோலுமாக உள்ளார்.

ஒல்லிக்குச்சியாக இருக்கும் ஹன்சிகாவின் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தயவு செய்து ஒழுங்காக சாப்பிட்டு பழையபடி புஸு புஸுன்னு வாங்க என்று கோரிக்கை விடுத்துள்ளனர்

ஹன்சிகாவை ரசிகர்கள் சின்ன குஷ்பு என்று அழைத்த நிலையில் அவர் ஒல்லிக்குச்சி உடம்புக்காரியாகிவிட்டார். ஹன்சிகாவுக்கு அழகே லைட்டா குண்டாக இருப்பது தான் என்கிறார்கள் ரசிகர்கள்.

You might also like More from author

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com