ஓ.பி.எஸ் நா ஓ.பன்னீர் செல்வம் இல்லடா. ஆப்பரேசன் சசிகலா டா AAA இயக்குனர்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நடந்து வரும் மாற்றங்கள் யூகிக்க முடியாத பல திருப்பங்களை கொண்டதாக இருக்கிறது. உண்மையில் இது அரசியல் சூழல் தான..??? அல்லது எதாவது படம் பார்க்கிறோமா என பல நெட்டிசன்கள் தங்களுடைய கருத்தை வெளியிட்டு வருகின்றனர்.

அனைத்திலும் ஹை லைட்டாக அமைந்தது, பவர் ஸ்டார் போல் இருந்த முதலமைச்சர் பன்னீர் செல்வம் ஒரே நாளில் சூப்பர் ஸ்டார்ராக மாறியதுதான்.

இப்படி பட்ட  மாற்றங்களால் அதிமுகவில் பெரும் பிரிவு ஏற்பட்டது. இந்த பிரிவு நல்லது என்பது போல் பல பொது மக்கள், மற்ற அரசியல் காட்சிகள், சினிமா பிரபலங்கள் என சிலர் நேரடியாகவும், சிலர் மறைமுகமாகவும் தங்களுடைய ஆதரவை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு கொடுத்து வந்தனர்.

இந்நிலையில் முதலமைச்சராக வேண்டும் என்று போட்டியில் களமிறங்கிய சசிகலா  இன்று சொத்துகுவிப்பு வழக்கு தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து  நீதிமன்றத்தில் சரணடைய உள்ளார்.

இது குறித்து தற்போது சிம்புவை வைத்து AAA படத்தை இயக்கிவரும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ஓ.பி.எஸ் நா ஓ.பன்னீர் செல்வம் இல்லடா. ஆப்பரேசன் சசிகலா டா என கபாலி பாணியில் தன்னுடைய ஆதரவையும் கருத்தையு,ம் கூறியுள்ளார்.

You might also like More from author